கல்லூரி பேராசிரியை காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்

Share this :
No comments

கவுரவ கொலை பயத்தால், கல்லூரி பேராசிரியை காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் சத்யசுந்தரம். திருச்சியில் வியாபாரம் செய்து வருகிறார். வியாபார விஷயமாக மதுரை சென்ற போது புதுஜெயில் ரோடு எஸ்.எஸ். காலனியை சேர்ந்த முத்தமிழ்செல்வி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கிடையேயும் காதல் மலர்ந்து 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். முத்தமிழ் செல்வி மதுரையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பும் படிக்கிறார்.

இந்நிலையில், சத்யசுந்தரம்-முத்தமிழ் செல்வி காதல் விவகாரம் பெண் வீட்டில் தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் முத்தமிழ் செல்வியின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் காதல் ஜோடி சத்யசுந்தரம் முத்தமிழ்செல்வி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதை அடுத்து, முத்தமிழ்செல்வியின் பெற்றோர் இருவரையும் தேடி சத்யசுந்தரம் வெறியுடன் வந்தவர்கள். அவர்கள் அங்கு இல்லாத்தால் இன்னொருவரை வெட்டி கொன்று விட்டார்கள். அவர்கள் கையில் சிக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்த காதல் ஜோடி நண்பர்கள் உதவியுடன் சென்னைக்கு தப்பி வந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படி முறையிட்டுள்ளனர்.

No comments :

Post a Comment