சுல்தான் - மேலும் இரு சாதனைகள்

Share this :
No comments


சல்மான் கானின் சுல்தான் இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதிய சரித்திரத்தை எழுதி வருகிறது.

முதல்நாளில் 36.54 கோடிகளை இந்திய திரையரங்குகளின் மூலம் வசூலித்த இந்தப் படம், தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

முதல்நாள் - 36. 54 கோடிகள்

இரண்டாவது நாள் - 37.32 கோடிகள்

மூன்றாவது நாள் - 31.67 கோடிகள்

நான்காவது நாள் - 36.62 கோடிகள்

ஐந்தாவது நாள் - 38.21 கோடிகள்

தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்த இந்தி திரைப்படம் சாதனையை பெற்றிருக்கிறது சுல்தான்.

அதேபோல் ஓபனிங் வீக் எண்ட் வசூலில் சுல்தான் இந்திப் படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. புதன் கிழமை வெளியான இந்தப் படம் முதல் 5 தினங்களில் 180.36 கோடிகளை தனதாக்கியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள ப்ரேம் ரத்தன் தான் பயோ 129.77 கோடிகளே வசூலித்துள்ளது.

பிகேயின் சாதனை வசூலான 340 கோடிகளை சுல்தான் தாண்டுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments :

Post a Comment