Sunday, July 10, 2016

சத்து நிறைந்த பச்சைப் பயறு கட்லெட்


உடலுக்கு வலுவூட்டும் பச்சைப் பயறு கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு - 300 கிராம்,

கேரட், பீன்ஸ் - தலா 75 கிராம்,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) - சிறிதளவு,

வெங்காயம் - 2,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.

செய்முறை:

* பச்சைப் பயறைத் 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* வெங்காயம், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்..

* ஒரு பாத்திரத்தில் வதக்கிய மசாலா, வேகவைத்த பச்சைப் பயறு காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* விருப்பமான வடிவில் கட்லெட்டாக பிடித்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்துள்ள கட்லெட்டை வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

பலன்கள்:
மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment