தேசிய கீதம் விவகாரம்: சன்னி லியோன் மீது வழக்குப்பதிவு
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சன்னி லியோன் தேசிய கீதத்தை பாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தேசிய கீதத்தை சன்னி லியோன் தவறாக பாடியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள புதிய அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடந்த புரோ கபடி லீக் தொடர்களின் தொடக்க விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கபில் சர்மா ஆகியோர் தேசிய கீதத்தை பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment