கௌதம்மேனனை கழற்றிவிட்ட ஹீரோக்கள்

Share this :
No comments


நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா... இந்தப் பாடல் இந்த நேரத்தில் கௌதம் வாசுதேவமேனனுக்குதான் சாலப்பொருத்தம்.

இரண்டு முன்னணி ஹீரோக்களால் தவிக்கவிடப்பட்ட அவர், போதும்டா உங்க அடாவடி என்று மூன்றாவது படத்துக்கு தாவியிருக்கிறார்.

சமூகத்தில் எப்படி ஆதிக்க சாதிகள் அதிகாரம் செலுத்துகிறதோ, அப்படி தமிழ் சினிமாவில் அதிகாரம் செலுத்துகிறவர்கள் ஹீரோக்கள். தொலைக்காட்சி பேட்டிகளிலும், பொது மேடைகளிலும் அப்பாவியாக பம்மும் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் எப்படி தெனாவெட்டாக நடந்து கொள்வார் என்பதை வேலையில்லா பட்டதாரி படத்தில் பணிபுரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கௌதம் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் அந்தப் படத்தை முடிக்காமல் வடசென்னைக்கு சென்றுவிட்டார். அச்சம் என்பது மடமையடா படத்தை முடிக்காமல் சிம்புவும் தொங்கலில் விட்டுள்ளார்.

இந்த இரு மெகா இம்சைகளிடமிருந்து விலகி நான்கு நாயகர்கள் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க தீவிரம் காட்டி வருகிறார் கௌதம். ஜெயம் ரவி, புனித் ராஜ்குமார், பிருத்விராஜ், சாய் தரண் தேஜ் ஆகியோர்தான் அந்த நால்வர்.

இம்சைகளை இப்படி விலக்கினால்தான் துன்பங்களிலிருந்து விடைபெற முடியும்.

நடத்துங்க கௌதம் சார் உங்க ராஜாங்கத்தை.

No comments :

Post a Comment