சி மொழியின் ஒருங்கிணைந்த அடுத்தபடிமுறைமாற்றத்தின் வெளியீடுஎன்னவாக இருக்கும்?
கணினியில் சி மொழி என்பது கடல் அன்று அது ஒரு பெருங்கடலாகும் எந்தஅளவிற்கு அனுபவம் அறிவு பெற்றுள்ளோமோ அந்தஅளவிற்கு நம்முடைய நடைமுறை பயன்பாட்டிற்கு தேவையானவாறு பயன்படுத்தி பயன்பெறமுடியும்
இதில் எந்தவொரு கணிதசெயல்பாடுகளில் இரும எண் வாரியாக முதல் படிமுறையானChar ,Short தரவுகைகளானது அடுத்த படிமுறையின் Signed int ,unsigned int தரமுயர்த்தபடுகின்றது உதாரணமாக
#include
int main()
{
signed char x = 0xFF;
unsigned char y = 0xFF;
//Compare both the values of x and y
if ( x ==y)
{
printf(“equal\n”);
}
else
{
printf(“unequal\n”);
}
return 0 ;
}
என்ற நிரல்தொடரின் வெளியீடு என்னவாக இருக்கும் என வினவினால் பெரும்பாலானவர்கள் x ,y ஆகிய இரண்டும் சமமானது(equal) என வெளியீடு இருக்கும் என உடனடியாக பதிலிடுவார்கள் ஆனால் உண்மையில் சமமற்றது (unequal)என வெளியீடு இருக்கும் என்பதே சரியான பதிலாகும்
இதில் ifஎனும் கூற்றால் சரிபார்த்திடும்போது முதலில் signed char ஆன x ஆனது 0xFFFFFFFF ஆக உருமாற்றபடுகின்றது அவ்வாறே unsigned charஆன yஆனது 0x000000FF ஆக உருமாற்றபடுகின்றது அதாவதுமுதல் படிமுறையில் இருந்தவை அடுத்தபடிமுறைக்கு மாற்றபட்டுவிட்டதால்அதன்பின்னர் இரண்டையும் ஒப்பீடு செய்திடும்போது நமக்கு சமமற்றது என விடைகிடைக்கின்றது
Labels:
information
No comments :
Post a Comment