Friday, July 29, 2016

கவலை வேண்டாம்... நீச்சல் உடையில் காஜல் அகர்வால்...



காஜல் அகர்வாலின் மார்க்கெட் இப்போது முன்பு போல் இல்லை. அஜித்தின் புதிய படத்தில் நடிக்கவிருப்பதை தவிர்த்தால், சொல்லிக் கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை காஜலுக்கு.

இப்படியே போனால் வறட்சிதான் என்பதை புரிந்து கொண்டவர், படங்களில் முன்பைவிட அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.

டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் நடித்துவரும் கவலை வேண்டாம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகின்றனர். நீச்சல் குளத்தில் ஜீவாவும், காஜலும் குளிப்பது போன்ற காட்சியில், நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார் காஜல் (பிறகென்ன பட்டுப்புடவையா கட்ட முடியும்?).

ரொம்ப கவர்ச்சியாக தெரியக் கூடாது என்பதற்காக நீச்சல் உடைக்கு மேல் வெள்ளை சல்லாத்துணி ஒன்றையும் போர்த்தியிருக்கிறார்.

எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை வருட இறுதியில் வெளியிட உள்ளனர்.

No comments:

Post a Comment