Monday, July 11, 2016

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது



முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான சென்னை போயஸ் தோட்டத்தில் பயங்கர குண்டு வெடிக்கும் என்று மர்மநபர் மிரட்டல் விடுத்து இருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அழைத்தவர் யார் என்ற தெரியாமல் இருந்தது. ஆனால், இந்த அழைப்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினர் தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்ததில் மரக்காணத்தை சேர்ந்த 16 வயதுச் சிறுவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment