பாக்ஸ் ஆபிஸில் சுல்தானை சுழற்றியடித்த கபாலி

Share this :
No comments


பாக்ஸ் ஆபிஸில் சல்மான் கானின் சுல்தானை கபாலி வீழ்த்தியிருக்கிறது.

கபாலி நேற்று வெளியானது. தென்னகத்தில் படத்துக்கு அமோக வரவேற்பு. வடஇந்தியாவிலும் 50 சதவீத இருக்கைகள் நிறைந்ததாக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. 50 சதவீதம் என்றது இந்தி பதிப்பிற்கு.

அமெரிக்காவில் முதல் நாள் வசூலிலேயே அனைத்து தென்னிந்திய திரைப்படங்களின் வசூலையும் கபாலி முறியடித்துள்ளது. வரும் நாள்களில் இந்திப் படங்களையும் கபாலி பின்னுக்கு தள்ளும் என்கிறார்கள்.

இந்திய அளவில் 40 கோடிக்கும் அதிகமாக கபாலி வசூலித்துள்ளது. இது சுல்தானின் முதல்நாள் இந்திய வசூலைவிட சுமார் நான்கு கோடிகள் அதிகம். ஏற்கனவே ஒரு வாரத்திற்கு அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் என்பதால் முதல் மூன்று தினங்களில் இந்தியாவில் 120 கோடிகளை கபாலி எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கபாலி நன்றாக இருக்கிறது இல்லை என்று இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், படத்தின் கலெக்ஷனை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்... கபாலி பிளாக் பஸ்டர்.

No comments :

Post a Comment