குருவழிபாட்டை சிறப்பிக்கும் ஆடி பெளர்ணமி விரதம்

Share this :
No comments
ஆடி பெளர்ணமி அன்று குரு பூர்ணிமா என்றவாறு மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை, ஆசான்களை போற்றி வழிபடும் தினமாக, குரு பூஜை செய்யப்படும். 

ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினம் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தை குரு பூர்ணிமா என்றவாறு மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை, ஆசான்களை போற்றி வழிபடும் தினமாக, குரு பூஜை செய்யப்படும். வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். 

வேதம் பயின்ற வேதாந்திகள் கூட தங்கள் குருமார்களை நினைத்து வழிபட வேண்டிய நாள். குரு மகான்களான தட்சிணா மூர்த்தி, வியாசர், ஆதிசங்கரர், இராமனுஜர் போன்ற குரு மகான்களையும் வழிபடவேண்டிய நாள். 

 கல்வி கடவுளான ஹயக்ரீவர் அவதரித்த நாள் ஆடி பெளர்ணமி தான். எனவே கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கும் வகையில் அன்றைய தினம் விரதமிருந்து ஹயக்ரீவரை மாணவர்கள் வணங்குதல் வேண்டும். ஹயக்ரீவர் ஜெயந்தியாக பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும்.

No comments :

Post a Comment