கபாலி இலவச டிக்கெட் கேட்ட அமைச்சரின் பிஏ வுக்கு கல்தா

Share this :
No comments

கபாலி படத்துக்கு 10 இலவச டிக்கெட் தரக் கோரி தியேட்டர் நிர்வாகத்துக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்த தமிழக செய்தித்துறை அமைச்சரின் உதவியாளர் நேற்று அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

நேற்று வெளியான கபாலி படத்தின் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்கள் பத்தை ரிஸ்வான் என்பவரிடம் தரும்படி சென்னை அபிராமி திரையரங்கு மேலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார், தமிழக செய்தித்துறை அமைச்சரின் முதன்மை உதவியாளர் பிரேம்குமார். அரசு முத்திரையுடன் அவர் அனுப்பிய கடிதம் இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து நேற்று அவரது பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டது. கபாலியால் பிரேம்குமாரின் பதவி கதம் கதம் ஆகியுள்ளது.

No comments :

Post a Comment