மும்பையில் இன்று மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
மராட்டிய மாநில தலைநகரான மும்பை பிவாண்டி பகுதியில் இன்று மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மும்பை:
மராட்டிய மாநில தலைநகரான மும்பை பிவாண்டி பகுதியில் இன்று மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 15-20 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
மும்பை பிவாண்டி பகுதியில் உள்ள ஜே.பி. நகரில் உள்ள மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை இடிந்து விழுந்தது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் பத்து பேரை காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 5 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 15-20 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment