கபாலிக்கு 10 டிக்கெட் வேண்டும் : கடிதம் கொடுத்த அரசு அதிகாரி

Share this :
No comments


கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்டு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி ஒருவர் சென்னை அபிராமி தியேட்டர் அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கபாலி படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பொதுவாக ரஜினிகாந்த் நடித்துள்ள படத்தை அவரின் ரசிகர்கள் பலர், முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு.

அதுபோல், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் தலைமை தனி உதவியாளர் ஒருவர் கபாலி படத்திற்கு 10 டிக்கெட்டுகள் வேண்டுமென்று, அபிராமி திரை அரங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

No comments :

Post a Comment