தெறி 100 -வது நாளில் வெளியாகும் கபாலி
தெறி படம் இன்னும் பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஒரு சென்டரிலாவது படத்தை 100 நாள்கள் ஓட்டுவது என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் உள்ளது
கபாலி வெளியாகவிருக்கும் 22 -ஆம் தேதிதான் தெறியின் 100 வது நாள் வருகிறது. தாணுவை பொறுத்தவரை இது மகத்தான நாள். விஜய், ரஜினி என்று இரு மெகா ஸ்டார்களை ஒரே நேரத்தில் படம் தயாரிக்கும் பாக்கியம் வேறு யாருக்கு அமையும். அதுவும் தெறி பிளாக் பஸ்டர். கபாலி அதுக்கும் மேலே ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
தெறி 100 வது நாளுக்கும், கபாலி ரிலீஸுக்கும் சேர்த்து விழா எடுக்கும் எண்ணமும் உள்ளதாம் தாணுவுக்கு.
அசத்துங்க, இது உங்களின் காலம்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment