நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மும்பையில் தற்கொலை செய்து கொண்ட தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா பானர்ஜி வழக்கில், போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மும்பையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பிரதியுஷா(24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கு, அவரது காதலன் ராகுல் சிங்கே காரணம் என, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி, மும்பை காவல் நிலையத்தில் புக்கார் அளித்தார். இதனால், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, ராகுல் சிங் மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், பிரதியுஷா தற்கொலை விவகாரத்தில், அவரது காதலர் ராகுல் சிங்கிற்கு எதிராக, 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment