Monday, June 6, 2016

சைலண்ட் மோடில் சமந்தா, நாக சைதன்யா



நான் இப்போது சிங்கிள் இல்லை. இளம் நாயகன் ஒருவரை காதலிக்கிறேன் என்று பேட்டியளித்த சமந்தா அதன் பிறகு வாயே திறக்கவில்லை.


என்னுடைய திருமணம் குறித்து இனி பேச மாட்டேன் என்று ட்விட்டரில் சபதமும் போட்டுள்ளார். காய் கனியும் முன்பே நாமே எதுக்கு கல் எடுத்துத் தரணும் என்று யோசித்திருக்க வேண்டும்.

சமந்தா காதலிப்பது நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவை என்று ஆந்திரா, தெலுங்கானாவில் டமாரமடித்து அறிவித்துவிட்டனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட இருவரும் பதிலளிக்காமல் சைலண்ட் மோடில் உள்ளனர்.

சமந்தா நடித்த, அ ஆ படம் சமீபத்தில் வெளியானது. அதனை சமந்தாவுடன் சேர்ந்து கண்டு களித்தார் நாக சைதன்யா. மேலும், வேறு சில இடங்களிலும் இந்த ஜோடியை ஒன்றாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் காதலை ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது நூறுசதம் உறுதி என்கிறார்கள் ஆந்திராவில்.

நூறாண்டு வாழட்டும்.

No comments:

Post a Comment