Friday, June 10, 2016

நடிகர் சந்தானத்தின் தந்தை திடீர் மரணம்



நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

நடிகர் சந்தானம் சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் (69). இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் கடந்த சில நாட்களாக உடல்லநலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டவே, சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி இன்று சற்று நேரம் முன்பு காலமானார்.

தகவல் அறிந்த திரைப்படத்துறையினர் நடிகர் சந்தானத்திற்கு போனிலும், நேரிலும் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், பலர் நீலமேகத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சந்தானம் தந்தை நீலமேகத்தின் இறுதிச் சடங்கு நாளை பொழிச்சலூரில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment