அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஜெயலலிதா ஆறாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் தேவையான பல திட்டங்களை முன்னிறுத்தி, அவர் நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 18ஆம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். தற்போதைய அவைத் தலைவர் மதுசூதனர் தலைமையில், காலை 11 மணி அளவில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.

No comments:
Post a Comment